டெல்லி: இந்த ஆண்டில் 937 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 937 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு முன்பே பதிவாகி உள்ளது. எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரத்தில் 412 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 693 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 937 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், டெங்குவுக்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே இந்த டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தெரிய வரும். சில சமயங்களில் டிசம்பர் 2-வது வாரம் வரை கூட இந்நிலை நீடிக்கும்.
இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டில் கொசுக்கள் உற்பத்திக்கான வானிலை சூழலால் முன்பே டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன என டெல்லி நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.