டெல்லி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சமூக வலைதள 'நண்பர்'


டெல்லி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சமூக வலைதள நண்பர்
x

சமூக வலைதளத்தில் பழகிய நண்பரை பார்க்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, சமூக வலைதளம் மூலம் தனக்கு அறிமுகமான நபரை நேரில் சந்திப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியை சந்தித்த சமூக வலைதள நண்பர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து மாணவியை தாப்ரி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்ட நபர் இருவரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story