டெல்லி: ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீர் தீ விபத்து
தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள படேல் நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மூன்று ரெயில் பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story