டெல்லி எல்லைகள் மே 28-ந்தேதி சீல் வைப்பு - காவல்துறை தகவல்


டெல்லி எல்லைகள் மே 28-ந்தேதி சீல் வைப்பு - காவல்துறை தகவல்
x

Image Courtesy : PTI

ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இதனிடையே டெல்லியில் மத்திய மந்திரி பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வரும் 28-ந்தேதி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடைபெறும் என மஹிலா பஞ்சாயத் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் வரும் 28-ந்தேதி பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும், எல்லையில் சீல் வைக்கப்படும் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் எனவும், நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களை மூடுவதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story