டெல்லியில் முதன்முறையாக ரோபோ மூலம் தீயணைப்பு முயற்சி..!


டெல்லியில் முதன்முறையாக ரோபோ மூலம் தீயணைப்பு முயற்சி..!
x

தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த ரோபோ விரைவில் முழு நேர பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் முதன் முறையாக ரோபோ மூலம் தீயணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியின் சமய்புர் பத்லி என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை 2.18 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.உடனடியாக தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், முதன் முறையாக ரோபோ உதவியுடன் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 36 தீயணைப்பு வாகனங்கள் உட்பட ஒரு ரோபோவும் சேர்த்து முழுவீச்சில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் ரோபோ இயந்திரம் மூலம், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரோபோ உதவியுடன் மிக குறைந்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த ரோபோக்களில் சென்சார் மற்றும் கேமராவும் பொருத்தப்பட்டு, மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதீத வெப்பத்தை தாங்கிக்கொள்ளக் கூடியவை.

மிகவும் ஆபத்தான பணிகளையும் செய்ய கூடிய வகையில், இந்த ரிமோட் கண்ட்ரோல் தீயணைப்பு ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், குறுகிய பாதைகளில் செல்லக்கூடியது. 140 குதிரைத்திறன் சக்தி கொண்ட மோட்டாரைக் கொண்டுள்ள இந்த ரோபோக்கள் ஒரு நிமிடத்திற்கு 2,400 லிட்டர் தண்ணீரை வெளியே பீய்ச்சி அடித்திடும் திறன் கொண்டவை.

தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த ரோபோ விரைவில் முழு நேர பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story