டெல்லி; விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்


டெல்லி; விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x

image courtesy; ANI

தினத்தந்தி 9 Aug 2023 11:49 AM GMT (Updated: 9 Aug 2023 11:53 AM GMT)

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.99.53 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில், துபாயில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தல்காரர் தங்கத்தை உருக்கி பேஸ்ட் முறையில் கடத்தி வந்துள்ளார். அதனை அடுத்து, அவரிடமிருந்து 1,893 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.99.53 லட்சம் என தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்திலும் பயணி ஒருவர் 1.52 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story