அக்னிபத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு


அக்னிபத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதில் மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டமான 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டங்களும், வன்முறையும் வெடித்தது. இது தொடர்பாக எஸ்.ஐ.டி. அமைக்கக் கோரி வக்கீல் விஷால் திவாரி வழக்கு தொடுத்தார்.

இதுபோல 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்யக் கோரி வக்கீல் எம்.எல்.சர்மா பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுக்களை பரிசீலித்த டெல்லி ஐகோர்ட்டு இவை தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.


Next Story