வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறியா? - டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்தால், டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் 34 வயதான ஒருவருக்கு குரங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், குரங்கு அம்மை பரவலைத்தடுப்பது குறித்து ஆராய்வதற்காக துணைநிலை கவர்னர் சக்சேனா தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து டெல்லியில் வந்திறங்கும் விமான பயணிகளில் கடும் காய்ச்சல், முதுகுவலி போன்ற குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளவர்கள் இருந்தால் அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story