ஆபாச கூடாரமாக மாறும் டெல்லி மெட்ரோ ரெயில் ...! முத்தமழை பொழிந்த இளம் ஜோடி -வைரலாகும் வீடியோ


ஆபாச கூடாரமாக மாறும் டெல்லி மெட்ரோ ரெயில் ...! முத்தமழை பொழிந்த இளம் ஜோடி -வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 11 May 2023 4:56 AM GMT (Updated: 11 May 2023 5:01 AM GMT)

சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறி உள்ளது.

புதுடெல்லி

டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிந்து சென்றது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

முன்னதாக, டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலானது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.டெல்லி மெட்ரோவில் இருக்கையில் அமர்ந்து அந்த நபர் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் (டிஎம்ஆர்சி) மெட்ரோவில் பயணிக்கும்போது பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது, மேலும் பயணிகள் "உடனடியாக நடைபாதை, நிலையம், நேரம் போன்ற விவரங்களைக் கொடுத்து இந்த விஷயத்தை ஹெல்ப்லைனுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி இருந்தது

இந்நிலையில் தற்போது டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மெட்ரோ ரெயிலுக்குள் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு வாலிபரின் மடியில் படுத்திருக்கும் இளம்பெண்ணை அந்த வாலிபர் முத்தமிட்டு கொண்டே இருக்கிறார்.

வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர். மேலும் இந்த ஜோடி மீது மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகமும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறி உள்ளது.




Next Story