டெல்லி: போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- போலீசார் விசாரணை


டெல்லி: போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
x

டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கு மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியின் பிரசாந்த் விஹாரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு சடலம் இருப்பதைப் பற்றி ஒரு வழிப்போக்கரால் காலை 9 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​காரின் ஓட்டுனர் இருக்கையில் சடலம் கிடப்பதையும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும் பார்த்ததாக துணை போலீஸ் கமிஷனர் (ரோகினி) பிரணவ் தயால் தெரிவித்தார்.

இறந்து கிடந்த நபர் பிரசாந்த் விஹார் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட கான்ஸ்டபிள் அமந்தீப் சிங் என்றும் சாதாரண விடுமுறையில் இருந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அமன்தீப் சிங்கின் உடல் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கான்ஸ்டபிள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பதை அறிய மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.


Next Story