டெல்லி: எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


டெல்லி:  எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.


புதுடெல்லி,


நாட்டில் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வருகிறார்.

இதன்படி, முன்னாள் மத்திய மந்திரி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு (வயது 90), நாட்டின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

எஸ்.எம். கிருஷ்ணா கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியாகவும், 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை மராட்டியத்தின் கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார்.

இதேபோன்று, ஆதித்ய பிர்லா குரூப்பின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாடகி சுமன் கல்யாண்பூருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


Next Story