தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் வெப்பநிலை..


தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் வெப்பநிலை..
x

டெல்லியில் இன்று அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று அதிகபட்சமாக 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை வடமேற்கு இந்தியாவில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்லியில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story