டெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு


டெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
x

டெல்லி பல்கலைகழக நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்ள உள்ளார். டெல்லி பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று காலை 11 மணியளவில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

பல்கலைகழகத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் டெல்லி பல்கலைக்கழக கணினி மையம் மற்றும் அகாடமி கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்படும் கல்வித் தொகுதிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

1 More update

Next Story