ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு..!


ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு..!
x

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் 288 பேர் பலியாகினர். 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பாகாநாகா அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்வதற்கு மாணவ, மாணவிகள் அச்சம் தெரிவிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். பெற்றோர் புகாரை தொடர்ந்து பள்ளியின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிவதற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜூன் 19ம் தேதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில் வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.


Next Story