பெங்களூருவில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏரியின் சுற்றுச்சுவர் இடிப்பு


பெங்களூருவில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏரியின் சுற்றுச்சுவர் இடிப்பு
x

பெங்களூருவில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏரியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

பெங்களூரு:

பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் முதல் மீண்டும் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மகாதேவபுரா மண்டலத்தில் நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. மகாதேவபுராவில் உள்ள ஷிலவந்தகெரே ஏரி, பசவனபுரா எஸ்.ஆர். லே-அவுட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.

அப்போது ஷிலவந்தகெரே ஏரியின் சுற்றுச்சுவர், ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் 130 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதுபோல எஸ்.ஆர். லே-அவுட்டில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து 80 மீட்டரில் 6 வீடுகளில் சுவர் கட்டப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த வீடுகளின் சுவரும் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்றும் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.


Next Story