டெல்லியில் அடர்ந்த மூடுபனி - 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம்


டெல்லியில் அடர்ந்த மூடுபனி - 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
x

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் நிலவியது.

புதுடெல்லி,

வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

தலைநகர் டெல்லியில் கடுமையான மூடுபனி நிலவி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் 50 உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் நிலவியது. மேலும் விமான நிலையத்தில் 18 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள் அவதியடைந்தனர்.

இது மட்டுமின்றி பனிமூட்டம் காரணமாக ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு 39 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதே சமயம் கடந்த 5 நாட்கள் நிலவிய கடும் குளிருக்குப் பிறகு டெல்லியில் இன்று குளிரின் தாக்கம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Next Story