ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்: மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
பழங்கால தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
தொழில்துறை பிரதிநிதிகள், கள அலுவலர்கள், தலைமையக துறை அதிகாரிகளின் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நேற்று உரையாற்றிய மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொலைத் தொடர்புத்துறை சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் குறித்த பணி மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்க்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில், தரமான தொலைத்தொடர்பு இணைப்பு அவசியமானது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளை அடைய, துறை அதிகாரிகளிடையே ஒழுங்குமுறையிலிருந்து வளர்ச்சி வரையிலான உணர்வில் மாற்றம் தேவை.
தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, துறை மற்றும் தலைமையகத்தில் உள்ள துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.பழங்கால தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம்.
இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.