பசுமாடுகளுக்கு தோல் நோய் எதிரொலி்: சிக்கமகளூருவில், மாட்டு சந்தைகளுக்கு டிசம்பர் 15-ந்தேதி வரை தடை


பசுமாடுகளுக்கு தோல் நோய் எதிரொலி்:  சிக்கமகளூருவில், மாட்டு சந்தைகளுக்கு   டிசம்பர் 15-ந்தேதி வரை தடை
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:46 PM GMT)

பசுமாடுகளுக்கு தோல் நோய் எதிரொலியால் சிக்கமகளூரு மாவட்டத்தில் மாட்டு சந்தைகள் நடத்த டிசம்பர் 15-ந்தேதி வரை தடை விதித்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு: பசுமாடுகளுக்கு தோல் நோய் எதிரொலியால் சிக்கமகளூரு மாவட்டத்தில் மாட்டு சந்தைகள் நடத்த டிசம்பர் 15-ந்தேதி வரை தடை விதித்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பசுமாடுகளுக்கு தோல்நோய்

கர்நாடகத்தில் பசுமாடுகளுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் நோய் பாதித்து சில மாடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாட்டுசந்தைகளுக்கு தடை

கர்நாடகத்தில் தற்பொழுது பசுமாடுகளுக்கு தோல் நோய் ஏற்பட்டு வருகிறது. சிக்கமகளூருவில் பசுமாடுகளுக்கு தோல் நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பசுமாடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பசுமாடுகளுக்கு தோல்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு சந்தைகளையும் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை நடத்த தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாடுகளின் போட்டி நடத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பசு மாடுகளை கொண்டு செல்வதற்கும் அனுமதி கிடையாது. இதற்கு விவசாயிகள், கால்நடை சந்தைகள் நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story