சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை; சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி


சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை; சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி
x

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு. சபரிமலையில் சாமி தரிசனம் குறித்து தற்போது எந்த கவலையும் வேண்டாம். பக்தர்கள் வீணாக பீதி அடைய தேவையில்லை. தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கடந்த காலங்களைப் போல் முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்


Next Story