முதல் மந்திரி ரங்கசாமியுடன் கருத்துவேறுபாடா..? - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்


முதல் மந்திரி ரங்கசாமியுடன் கருத்துவேறுபாடா..? - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
x

முதல் மந்திரியிடம் இருந்து வரும் கோப்புகளுக்கு தான் ஒப்புதல் அளிப்பதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதல் மந்திரிக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது.

டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு. முதல் மந்திரியிடம் இருந்து வரும் கோப்புகளுக்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.


Next Story