வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்; சுகாதார மந்திரி சுதாகர் உத்தரவு


வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்; சுகாதார மந்திரி சுதாகர் உத்தரவு
x

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சுகாதார மந்திரி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் மந்திரி சுதாகர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்பட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் விரைவு மருத்துவ குழுக்களை மாவட்ட-தாலுகா அளவில் தயாராக வைக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிராம அளவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க வேண்டும். நோய்கள் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு சுதாகர் பேசினார்.

1 More update

Next Story