உத்தரபிரதேச காங்கிரசில் அனைத்து குழுக்களும் கலைப்பு - மல்லிகார்ஜுன கார்கே நடவடிக்கை
உத்தரபிரதேச காங்கிரசில் அனைத்து குழுக்களையும் கலைத்து மல்லிகார்ஜுன கார்கே நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அதற்கு முன்பாக அம்மாநில காங்கிரசில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த குழுக்கள் அனைத்தையும் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலைத்து உத்தரவிட்டார். மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அவர் மாற்றி அமைக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2.33 சதவீத ஓட்டுகளையே பெற்றது. இந்த பின்னணியில், குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story