ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு


ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு
x

ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்து மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒடிசா மாநிலத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஒடிசா காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவர் பக்த சரண்தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story