மணிப்பூரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை


மணிப்பூரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை
x

அமைதிக்கான தீர்வு காண மணிப்பூரை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர் இடையே சுமார் 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரம் இன்னும் ஓயவில்லை. அங்கு அமைதியை ஏற்படுத்த மாநிலத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குகி இன தலைவருமான பாவோலியன்லால் ஹாக்கிப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'மணிப்பூர் மாநிலம் இன ரீதியாக 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு தனியாக அரசியல் மற்றும் நிர்வாக அங்கீகாரம் வழங்குவதே முன்னோக்கி செல்லும் வழியாக பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை அங்கு நிலையான அமைதியை உறுதி செய்யும் எனக்கூறிய அவர், ஒவ்வொரு சமூகமும் சிறந்து விளங்க வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் மணிப்பூர் பிரிவினைக்கு முதல்-மந்திரி ைபரேன் சிங் மற்றும் மெய்தி இன அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் குகி இனத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்த வழிமுறையை எதிர்த்து வருகின்றன.

இந்த கோரிக்கைக்கு எதிராக இம்பாலில் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பிரமாண்ட பேரணி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story