காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் விக்கித்துப்போய் உள்ளன; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் விக்கித்துப்போய் உள்ளன; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் விக்கித்துப்போய் உள்ளன என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் விக்கித்துப்போய் உள்ளன என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முடிவு செய்ய வேண்டும்

அரசு சார்பில் யாருக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதற்கு கணக்கு, பொறுப்பு இருக்க வேண்டும். அரசின் திட்ட பயன்களை பெறும் பயனாளிகள் வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். வேறு ஒருவரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியாது. வீட்டின் குடும்ப தலைவி யார் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

குடும்ப விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளில் யார்-யார் உள்ளனர் என்பது கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதை கண்டு பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) போன்ற எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களின் இந்த பொறாமைக்கு மருந்து இல்லை. அவர்கள் பேச முடியாமல் விக்கித்துப்போய் உள்ளனர்.

தங்களுக்கு வேண்டாம்

காங்கிரசின் திட்டங்களை குறை சொல்லும் பா.ஜனதாவினர் முதலில் 2 கோடி வேலைகளை உருவாக்குவதாக கூறியது குறித்து பேச வேண்டும். அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யட்டும். அதுபற்றி யாரும் கேட்காமல் இருப்பது ஏன்?. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கூற முடியுமா?. நாங்கள் ஏழைகளுக்கு உதவி செய்கிறோம்.

வரி செலுத்துவோர் இந்த திட்டத்தின் சலுகை தங்களுக்கு வேண்டும் என்று கேட்கவில்லை. இந்த திட்டத்தின் சலுகை தங்களுக்கு வேண்டாம் என்று பலர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து அரசு தனது முடிவை கூறியுள்ளது. தகுதியான அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story