கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: டிகே சிவக்குமார் நம்பிக்கை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத் தேர்தல் தொடர்பாக வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்ட சபை ஏற்படும் என்றே வந்துள்ளன. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வென்றாலும் பெரும்பான்மைக்கு வாய்ப்பு இல்லே மெஜாரிட்டி செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலில் இருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறேன். அதே எண்ணிக்கையில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனவே தொங்கு சட்டப்பேரவை குறித்தோ, மஜதவுடன் கூட்டணி குறித்தோ பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி" இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.