மனம் உடைந்து அழுத டி.கே.சிவக்குமார்


மனம் உடைந்து அழுத டி.கே.சிவக்குமார்
x

டெல்லி சிறையில் இருந்த நாட்களை நினைத்து டி.கே.சிவக்குமர் மனம் உடைந்து அழுதார்.

பெங்களூரு,

ஒற்றுமையாக பணியாற்றினோம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் வெற்றியின் ஆனந்தத்தில் தான் டெல்லி சிறையில் இருந்த நாட்களை நினைத்து பார்த்தும், தன்னை சோனியா காந்தி நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறியது குறித்தும் குறிப்பிட்டு கதறி அழுது அவர் கண்ணீர் சிந்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தான் காரணம். அவர்களை நான் பாராட்டுகிறேன். எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கூட்டு தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றினோம். அதனால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் வெற்றி பெறுவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரிடம் நான் கூறினேன்.

மறக்க முடியாது

பா.ஜனதாவினர் என்னை சிறையில் வைத்தபோது, என்னை சோனியா காந்தி சந்தித்து ஆறுதல் கூறியதை என்னால் மறக்க முடியாது. காந்தி குடும்பம், காங்கிரஸ் மற்றும் நாட்டு மக்கள் என் மீது காட்டிய அன்பு தான் எனக்கு நம்பிக்கையை அளித்தது. சித்தராயைா உள்பட கட்சியின் அனைத்து தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story