கார் பம்பருக்குள் சிக்கி 70 கி.மீ. சென்ற நாய் - சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்பு
சிறு காயங்களுடன் காரின் பம்பருக்குள் சிக்கி இருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கார் புத்தூருக்குச் சென்றுள்ளது. அப்போது சாலையில் நாய் ஒன்று குறுக்கிட்டதால் காரை நிறுத்திய சுப்பிரமணி, வெளியே இறங்கி வந்து நாயை தேடியுள்ளார்.
ஆனால் அங்கு நாயை காணாததால் மீண்டும் தனது காரை இயக்கியுள்ளார். பின்னர் புத்தூர் வரை சுமார் 70 கி.மீ. தூரம் பயணம் செய்த அவர், காரின் பம்பரில் நாய் சிக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மெக்கானிக்கை வரவழைத்து காரின் பம்பரை கழற்றி, சிறு காயங்களுடன் பம்பருக்குள் சிக்கி இருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story