'என்னை சுட்டுவிடாதீர்கள்' - கழுத்தில் பதாகையுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த திருடன்


என்னை சுட்டுவிடாதீர்கள் - கழுத்தில் பதாகையுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த திருடன்
x

‘என்னை சுட்டுவிடாதீர்கள்’ என்ற பெயர் பதாகையை கழுத்தில் அணிந்தவாறு திருடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கொடா மாவட்டம் மொஹிலி ஹொரி கிராமத்தை சேர்ந்த கல்லூரி இளைஞன் கடந்த பிப்ரவரி 20ம் தேதி பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த இளைஞரை துப்பாக்கி முனையில் வழிமறித்த இரண்டு பேர் இளைஞரை தாக்கி பைக், செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கித் வர்மா உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கித் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். மேலும், அங்கித் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த அங்கித் வர்மா இன்று போலீசில் சரணடைந்தார். 'என்னை சுட்டுவிடாதீர்கள்' என்ற பெயர் பதாகையை கழுத்தில் அணிந்தவாறு திருடன் அங்கித் போலீஸ் நிலையத்தில் சரண்டைந்தார்.

தன்னை என்கவுண்ட்டர் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அங்கித் போலீசில் சரணடைந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story