தேசிய எரிவாயு குழாய் குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி - மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி பதில்


தேசிய எரிவாயு குழாய் குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி - மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி பதில்
x

நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் குழாய் தொகுப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி இராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

"ஒரே இந்தியா ஒரே எரிவாயு தொகுப்பு" என்ற கொள்கை அடிப்படையில் தேசிய அளவிலான எரிவாயுக் குழாய் தொகுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இயற்கை எரிவாயு வழங்கலை உறுதிப்படுத்த, தேசிய அளவிலான எரிவாயு குழாய் தொகுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி இராமேஸ்வர் தேலி, தேசிய அளவிலான எரிவாயுக் குழாய் தொகுப்பு அமைக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் குழாய் தொகுப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எண்ணூர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே 160 கிலோ மீட்டர் குழாய் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் இராமேஸ்வர் தேலி தெரிவித்தார்.


Next Story