சாலையோரம் கிடக்கும் சாக்கடை கழிவுகள்

சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.
பெங்களூரு
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 6-வது செக்டார் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணி சமீபத்தில் நடந்தது. இந்த சாக்கடை கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை சாலையோரம் மாநகராட்சி ஊழியர்கள் கொட்டி உள்ளனர். இதனால் சாலையோரம் சாக்கடை கழிவுகள் குவிந்து கிடக்கிறது.
இதன்காரணமாக அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. இதனால் சாலையோரம் கிடக்கும் சாக்கடை கழிவுகளை அள்ள நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் சாலையோரம் சாக்கடை கழிவுகளை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், எச்.எஸ்.ஆர். லே-அவுட், பெங்களூரு.
Related Tags :
Next Story






