கண்ணிவெடியை செயலிழக்க செய்தபோது விபத்து - போலீஸ் படுகாயம்


கண்ணிவெடியை செயலிழக்க செய்தபோது விபத்து - போலீஸ் படுகாயம்
x

கண்ணிவெடியை செயலிழக்க செய்தபோது வெடித்ததில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் பெடி துங்கலி கிராமத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நக்சலைட்டு தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேடையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற நிலையில் நக்சலைட்டுங்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து என்கவுண்டர் நடந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கண்ணி வெடி கிடைத்தது. அந்த கண்ணிவெடியை செயலிழக்க செய்ய போலீசார் முயன்றனர். அப்போது, கண்ணிவெடி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த போலீஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story