சோப்பில் மறைத்து ரூ.33 கோடி போதைபோருள் கடத்தல்; மும்பை விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி


சோப்பில் மறைத்து ரூ.33 கோடி போதைபோருள் கடத்தல்; மும்பை விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி
x

எத்தியோப்பியாவில் இருந்து மும்பை வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இன்று விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த இந்திய பயணி உடலுக்கு தேய்த்து குளிக்கும் சோப்புகளை கொண்டுவந்தார்.

சோப்புகள் நிறைய இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த சோப்புகளை உடைத்து பார்த்தனர். அப்போது, மேல்பகுதி சோப்பாகவும் அதன் உள்ளே கவரில் கொக்கெய்ன் போதைப்பொருள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அனைத்து சோப்புகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்து 3 கிலோ 360 கிராம் போதைப்போருளை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த போதைப்பொருளின் மொத்த மதிப்பு 33 கோடியே 60 லட்ச ரூபாயாகும்.

இதனை தொடர்ந்து சோப்பில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்த இந்தியரை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர்.


Next Story