விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

சொரப் அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஜடே கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப்(வயது 28), விவசாயி. இவர் ஜடே கிராமத்தில் சொந்தமாக தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். இதற்காக வங்கியில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே வங்கி அதிகாரிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு தொல்லை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனந்தபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story