சித்ரதுர்காவில் டிராக்டா் ஏறி பாம்பு செத்தது; 50 குட்டிகள் உயிருடன் மீட்பு


சித்ரதுர்காவில் டிராக்டா் ஏறி பாம்பு செத்தது; 50 குட்டிகள் உயிருடன் மீட்பு
x

சித்ரதுர்காவில் டிராக்டர் ஏறி பாம்பு செத்தநிலையில் அதன் 50 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

சிக்கமகளூரு:

சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா அருகே உள்ள ஹம்பனூர் கிராமத்ைத ேசா்ந்தவர் மல்லேசப்பா. விவசாயி. இவா் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். அப்பொழுது டிராக்டர் சக்கரத்தில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதைகண்டு மல்ேலசப்பா டிராக்டரில் இருந்து இறங்கி பாா்த்துள்ளார். அப்போது கட்டுவிரியன் பாம்பின் வயிற்றுப் பகுதியிலும் சக்கரம் ஏரியதால் அது செத்தது தெரியவந்தது.

மேலும் அந்த பாம்பின் வயிற்றில் இருந்த 50 பாம்பு குட்டிகள் உயிருடன் வெளியே வந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு மல்லேசப்பா தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், 50 பாம்பு குட்டிகளையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story