பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் - எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்


பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் - எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்
x

Image Courtesy : ANI

ஆளில்லா விமானம் மூலம் 6 கிலோ எடை கொண்ட உயர்ரக ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயற்சித்துள்ளனர்.

அம்ரித்சர்,

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய பகுதிக்குள் ஆளில்லா விமானம் ஒன்று நுழைவதைக் கண்ட பாதுகாப்புப் படை வீரர்கள், உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தினர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் ரசூல்புரா என்ற கிராமத்தில் விழுந்து கிடந்தது. அதனை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அதில் 6 கிலோ எடை கொண்ட உயர்ரக ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பரிவினரிடம் ஹெராயினை ஒப்படைத்த பாதுகாப்புப் படையினர், கைப்பற்றப்பட்ட ஆளில்லா விமானம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story