மிசோரம் மாநிலத்தில் ரூ.87 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்


மிசோரம் மாநிலத்தில் ரூ.87 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
x

சுமார் 2 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அய்சால்,

மிசோரம் மாநிலத்தில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் எல்லைப்பகுதி அருகே அசாம் ரைபில்ஸ் பிரிவு அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில், ரூ.60 கோடி மதிப்பிலான சுமார் 2 லட்சம் போதை மாத்திரைகளும், ரூ.27.8 கோடி மதிப்பிலான 3.9 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் சுமார் ரூ.87 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 2 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் அசாம் ரைபில்ஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story