ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து


ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
x

ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு ரெயில் ராஜமுந்திரி அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. சரக்கு ரெயில் விபத்தை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 9 ரெயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்ற பின் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


Next Story