கலவரம் எதிரொலியாக மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு


கலவரம் எதிரொலியாக மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு
x

கலவரம் எதிரொலியாக மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், வன்முறை மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில் மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story