லே அருகே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு


லே அருகே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு
x

கோப்புப்படம்

லடாக் பகுதியின் லே அருகே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.

லே (லடாக்) [இந்தியா],

லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

அதிகாலை 2:16 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு: 4.1, 18-06-2023 இன்று ஏற்பட்டது, நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும்.

நிலநடுக்க்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Related Tags :
Next Story