ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:08 AM IST (Updated: 6 Aug 2023 3:44 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்ப்பட்டது.

காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.31 மணியளவில் ஏற்பட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டது. தலைநகர் டெல்லி, அரியானா உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆனால், இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story