ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து


ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 31 March 2024 10:51 AM IST (Updated: 31 March 2024 10:52 AM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"புதுப்பித்தலும், நல்லவற்றை எதிர்நோக்கிய நம்பிக்கையும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கும் வகையில் இந்த நாள் நம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கமளிக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story