மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்


மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்
x

3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உத்தரவை முழுமையாக அமல்படுத்த தவறியதற்காக மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி.யை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மேலும் உரிய விளக்கம் அளிக்குமாறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நோட்டீசும் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 31-ந் தேதி அன்று பிறப்பித்த உத்தரவில், 3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மாநில அரசு நிர்வாகம் இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. மாநில நிர்வாகம் விதிமுறைகளுக்கு இணங்காதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற செயலற்ற தன்மையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு தேர்தல் ஆணையம் கடிதத்தில் கூறியுள்ளது.

1 More update

Next Story