'அக்னிபத்' போராட்டம் எதிரொலி : நாடு முழுவதும் 491 ரெயில் சேவை பாதிப்பு


அக்னிபத்  போராட்டம் எதிரொலி : நாடு முழுவதும் 491 ரெயில் சேவை பாதிப்பு
x

Image Courtesy : PTI 

491 ரெயில் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள்ளது

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றனரெயில்களுக்கு தீவைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது.பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்பட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்வதால் ,491 ரெயில் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள்ளது.மேலும் 254 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது


Next Story