நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் - தலைமைப் பொருளாதார ஆலோசகர்


நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் - தலைமைப் பொருளாதார ஆலோசகர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Sep 2022 3:39 AM GMT (Updated: 21 Sep 2022 4:42 AM GMT)

கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

மும்பை:

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது,

கொரோனா பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்றவைகளால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவை வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் இதன் மறுமதிப்பீடு இறங்குமுகமாக இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் பொருளாதார வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு தற்போது சரிந்துள்ளது.

அதன்படி, 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். மேலும் 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாகத் தக்கவைக்கும் வகையில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது எனக் கூறினார்.


Next Story