ஜப்பானில் பஸ் -லாரி இடையே மோதல்: 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம்


ஜப்பானில் பஸ் -லாரி இடையே மோதல்: 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம்
x

ஜப்பானில் பஸ் -லாரி இடையே பயங்கர மோதலில் 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

டோக்கியோ,

ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story