காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சங்கெத் சர்கருக்கு ரூ.30 லட்சம் பரிசு - ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு


காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சங்கெத் சர்கருக்கு ரூ.30 லட்சம் பரிசு - ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
x

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சங்கெத் சர்கருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மும்பை,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் சங்கெத் மகாதேவ் சர்கர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சங்கெத் சர்கருக்கு ரூ. 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சங்கெத் சர்கருக்கு ரூ. 30 லட்சமும், அவரது பயிற்சியாளருக்கு ரூ. 7 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story