' லா நினா காலம்' இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்


 லா நினா காலம் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்
x

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது மிதமான எல் நினோ நிகழ்ந்து வருகிறது. இது பருவமழை காலம் தொடங்குவதற்குள் சமநிலைக்கு வரும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு லா நினா நிலை ஏற்பட்டு அதுவும் ஆகஸ்டு-செப்டம்பருக்குள் இறுதிக்கு வரும். இந்தியாவில் கடந்த 1951-2023-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எல் நினோவுக்கு பிந்தைய 9 லா நினா காலகட்டங்களில் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்திருக்கிறது.

அந்தவகையில் இந்தியாவில் வருகிற பருவமழை காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) வழக்கத்தை விட அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாக (நீண்டகால சராசரி 86 செ.மீ.) இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

1 More update

Next Story