அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் உதயநிதி ஸ்டாலின். அவரது வெற்றியை எதிர்த்து ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் 'வேட்பு மனுவில் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதால், அவரது வேட்புமனு ஏற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஆண்டு ஐகோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்.பிரேமலதா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது 22 வழக்குகள் பற்றிய விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story