தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு - ஆடிப்போன அரசியல் கட்சிகள்


தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு - ஆடிப்போன அரசியல் கட்சிகள்
x

கோப்புப்படம் 

அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் தற்போது வரை 15 கட்சிகள் மட்டுமே தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உரிய அறிக்கையை தாக்கல் செய்யாத 2,174 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் வருமான கணக்கு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யாத 2,056 அரசியல் கட்சிகளுக்கு அது குறித்த விபரங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் இணையத்தளத்தில் வெளியிடுவதோடு உரிய ஆவணங்களுடன் 30 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வாய்ப்பளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத கட்சிகள் தேர்தல் ஆணைய விதிகளின்படி சலுகைகளை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story